தமிழ்நாடு

உள்நோக்கத்துடன் உள்ளாட்சித் தேர்தல் தடுக்கப்படுகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தலை உள்நோக்கத்துடன் தமிழக அரசு தடுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

உள்ளாட்சித் தேர்தலை உள்நோக்கத்துடன் தமிழக அரசு தடுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
 இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்று புதிய காரணங்களைக் கண்டுபிடித்து, தமிழகத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சூழல் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இது கண்டனத்துக்குரியது.
 உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி கங்கணம் கட்டிக் கொண்டு பதில் மனுக்களைத் தாக்கல் செய்து, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ளாட்சி ஜனநாயகத்தை அடியோடு பாழ்படுத்தி வருகின்றன. அதிமுக அரசின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கு தமிழகத்தில் ஒரு தனி மாநிலத் தேர்தல் ஆணையம் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 மாநில தேர்தல் ஆணையருக்கு, தேர்தலை நடத்துவதற்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டிய அரசு, கால அவகாசம் கேட்டுக்கொண்டே இருப்பது தோல்வி பயத்தின் உச்சகட்டம்.
 எனவே, உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் அதிமுக அரசு தொடர்ந்து நடத்தி வரும் ஒத்துழையாமை இயக்கத்தை, மாநில தேர்தல் ஆணையர் தானாகவே முன் வந்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தெரிவித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT