தமிழ்நாடு

டார்ச் இருந்தாலும் பார்வைக் கோளாறு?: கமலைக் கலாய்த்த தமிழிசை 

டார்ச் இருந்தாலும் பார்வைக் கோளாறா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.

DIN

சென்னை: டார்ச் இருந்தாலும் பார்வைக் கோளாறா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று ஒடிஷாவைத் தாக்கிய பானி புயல் கடுமையான சேதங்களை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மாநில அரசின் முன்திட்டமிடல் முயற்சிகளின் காரணமாக பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.    

அதற்காக பல்வேறு தரப்பினரும் மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை பாராட்டுகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசனும் நவீன் பட்நாயக்கையும், ஒடிஷா மாநில அரசையும் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் டார்ச் இருந்தாலும் பார்வைக் கோளாறா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது:

நம்மஊர் கமல் ஒரிசா முதல்வரை மட்டுமே பாராட்டுகிறார் புயல் நிவாரணம் சூப்பர் என்கிறார். இதிலுமா மோடி வெறுப்பு? புயல் வரும் பாதையை துல்லியமாக கணித்து  எச்சரிக்கை அளித்த ISRO? களத்தில் முப்படை பேரிடர் மீட்பு குழு? புயல் வருமுன்பே 1000 கோடி நிவாரணம்? டார்ச் இருந்தாலும் பார்வை கோளாறு?

இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT