தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரு பக்கம் அனல் பறக்கும்; மறுபக்கம் குடை பிடிக்கும்!

DIN

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்தே வெயில் வெளுத்து வாங்குகிறது.

போன வாரமெல்லாம் எப்போ மழை பெய்யும் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், இந்த வாரம் தொடங்கியது முதலே மழை கூட வேண்டாம், வெயில் குறைந்தாலே போதும் என்று ஏங்க ஆரம்பித்து விட்டார்கள். ஏன் என்றால் கோடை வெயில் காலை 8 மணிக்கெல்லாம் சதமடிக்கத்  தொடங்கி நிற்காமல் ரன்களைக் குவிப்பதே காரணம்.

இதற்கிடையே, வேலூர் - திருத்தணி பகுதிகளில் நேற்று வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் வெயில் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் வழக்கமான அறிக்கையில், தமிழகத்தில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், தமிழகத்தில் இன்று முதல் புதன்கிழமை வரை பெரும்பாலான இடங்களில் அனல் காற்றுடன் கடுமையான வெப்பம் நீடிக்கும்.

கன மழையைப் பொருத்தவரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்கிறதோ இல்லையோ, வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பினால் தமிழக மக்களுக்கு மழை பற்றிய ஒரு சிறிய நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT