தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 22ம் தேதி நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மே 22ம் தேதி நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

DIN


மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மே 22ம் தேதி நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த 13 பேருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் பேரணி நடத்த உத்தரவிடக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.

அதில், மே 22ம் தேதி காலை 9 மணி முதல் 11 மணிக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும். ஏதேனும் ஒரு உள் அரங்கில் நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தலாம். அதில் 250 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்றும் அமைதியான முறையிலேயே நடத்த வேண்டும் என்றும், நினைவஞ்சலிக் கூட்டத்தை காவல்துறை விடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மே 23ம் தேதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெறுவதால் நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், உள் அரங்கில் நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்த அனுமதி அளித்திருக்கும் நீதிமன்றம், ஊர்வலதை நடத்த அனுமதிக்க இயலாது என்று கூறிவிட்டது.

மேலும், நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஏராளமான மக்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தினார். இதற்கு  தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 250 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT