தமிழ்நாடு

இதய நோய் மருந்து தட்டுப்பாடு  ஜூன் மாதம் சீரடையும்

DIN


அரசு மருத்துவமனைகளில் இருக்கும் இதய நோய்க்கான மருந்துகளின் தட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் மாதத்தில் சீரடைந்து  தேவையான அளவு விநியோகிக்கப்படும் என்று மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் உமாநாத் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நெஞ்சு சளி, தொண்டை வலி, இதயம் மற்றும் புற்று நோய்களுக்கான மருந்துகள் போதிய அளவில் இல்லை என்று பரவலாகப் புகார் கூறப்படுகிறது. அதேபோன்று சர்க்கரை நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் இன்சூலின் மருந்தும், ஆன்டிபயாடிக் போன்ற நோய் தடுப்பு மருந்துகளுக்கும் தட்டுப்பாடாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இரு மாதங்களுக்கும் மேலாக இந்த நிலை நீடிப்பதாகவும், மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் மருத்துவமனை மருந்தகங்களில் கிடைப்பதில்லை என்றும் நோயாளிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக வெளியே உள்ள மருந்து கடைகளில் பணம் கொடுத்து மாத்திரைகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு வழங்கப்படும் க்ளாப்பிலெட் - 75, கார்டிவாஸ் ஆகிய மருந்துகளுக்கும், வயிறு எரிச்சல் ஏற்படாமல் இருப்பதற்காக வழங்கப்படும் ரேன்டேக் மருந்துக்கும் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் உமாநாத், வியத்நாம் நாட்டில் இருந்து தினமணி நிருபரிடம் கூறியதாவது:
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான வேதிப்பொருள்களில் 80 சதவீதம் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், காற்று மாசு காரணமாக சில வேதிப் பொருள்களை தயாரிப்பதை சீனா நிறுத்தி வைத்துள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீர்வு காணும் நோக்கில், அந்த மருந்துகளை உள்ளூர் சந்தையில் வாங்கிக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல மருந்துகளுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் க்ளாப்பிலெட், ரேன்டேக் ஆகியவையும் அடங்கும். கார்டிவாஸ் என்பது இதய நோய்க்கு வழங்கப்படும் சிறப்பு மருந்து. அது தற்போது போதிய அளவு இருப்பு உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SCROLL FOR NEXT