தமிழ்நாடு

இந்து குறித்தப் பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஹெச்.ராஜா

DIN

இந்து குறித்தப் பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12ஆம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனக் குறிப்பிட்டுப் பேசியதாக கூறப்படும் பேச்சானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து பாஜக தேசிய தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
வாக்கு வங்கி அரசியலுக்காக வரலாறு தெரியாமல் கமல் பேசுகிறார். கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல. அவர் ஆன்டி மனிதகுலம். இந்து குறித்தப் பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். 

கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்துவுக்கு எழுந்தது போல் கமலுக்கு எதிர்ப்பு உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

SCROLL FOR NEXT