தமிழ்நாடு

ஓட்டப்பிடாரத்தில் வாக்காளர்களுக்கு பணம்: அதிமுக மீது திமுக தேர்தல் ஆணையத்தில் புகார்

DIN


ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.  

தமிழகத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக திமுக அளித்துள்ள புகாரில், "தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு வெளியே சோதனைகள் மேற்கொள்ளவில்லை. அதனால், அதிமுகவினர் தூத்துக்குடியில் அமைந்துள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். இதன்மூலம், தூத்துக்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உடனடியாக சோதனை நடத்தினால் பணப்பட்டுவாடாவை தடுக்கலாம். 

தேர்தல் அமைதியான முறையிலும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த ஓட்டப்பிடாரம் தொகுதி வாக்காளர்களுக்கு எந்தவொரு இடத்தில் இருந்தும் பணம் வழங்குவதை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT