தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் நினைவஞ்சலி

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

ANI

மறைந்த பிரதமர் ராஜீவ் 28-வது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் உத்தரப் பிரதேச (கிழக்கு) காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியினர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த பிரதமர் ராஜீவ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக (3-0) வென்றது பாகிஸ்தான்!

எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது என்ன? - ஜி.கே.வாசன் பேட்டி!

உண்மையான அன்பு... பிக் பாஸிலிருந்து வெளியேறிய திவாகரின் வைரல் விடியோ!

ரஜினிக்கு நடிக்க கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு!

தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்குவது எப்போது?

SCROLL FOR NEXT