தமிழ்நாடு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: அமுதா உள்பட 7 பேரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

DIN

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் அமுதா உள்பட 7 பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நாமக்கல் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. 

குழந்தைகளை சட்ட விரோதமாக வாங்கி விற்பனை செய்ததாக அமுதா,  அவரது கணவர் ரவிச்சந்திரன்,  ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், கருமுட்டை இடைத்தரகர்களான பர்வீன்பானு,  ஹசீனா என்ற நிஷா, லீலா, அருள்சாமி, செல்வி ஆகிய எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.  

அதன்பின்,  சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் துரித விசாரணை மேற்கொண்டு, உதவி செவிலியர் சாந்தி, பெங்களூரு அழகுக்கலை நிபுணர் ரேகா ஆகிய இருவரை கைது செய்தனர். இவ் வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் அமுதாவின் தம்பியான நந்தகுமார் (39), கடந்த, 16-ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

இந்நிலையில் ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT