தமிழ்நாடு

தேனி அதிமுக வெற்றி ஆய்வுக்குரியது: கே.பாலகிருஷ்ணன்

DIN

தேனி மக்களவைத் தொகுதியில்  அதிமுகவின்  வெற்றி ஆய்வுக்குரியது என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றது என்பது  ஆய்வுக்குரிய விஷயம். 
அந்தத் தொகுதியில் பணம் தாராளமாக விநியோகிக்கப்பட்டதாகவும், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குகளில்   முரண்பாடு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
எனவே, இவை அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்துவது என்பதில் தவறு எதுவுமில்லை என்பதே எனது கருத்து என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT