தமிழ்நாடு

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தம்பதி தீயில் கருகியது எப்படி? போலீஸ் விசாரணை

DIN

வந்தவாசி அருகே பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனித்து வசித்து வந்த முதிய தம்பதி தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த நிலையில், அவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமம், காவேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு (94). இவரது மனைவி அலமேலு (90). இந்தத் தம்பதிக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். பல ஏக்கர் நிலம், வீடு என்று வாழ்ந்து வந்த இந்த தம்பதி தங்களது சொத்துக்களை எல்லாம் பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்து விட்ட பிறகு அவர்களை  பிள்ளைகள் கைவிட்டுவிட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக காவேடு பகுதி, பத்திரப்பதிவு அலுவலகத்தின் பின்புறம் உள்ள காரிய மண்டபம் அருகே அப்பாவு, அலமேலு ஆகியோர் துணியாலான கூரையைக் கட்டி, பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இந்தத் தம்பதி தீயில் கருகி, இறந்து கிடந்ததை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்தனர். இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீஸார் வந்து தம்பதியின் சடலங்களைக் கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தம்பதி எப்படி இறந்தனர், யாரேனும் தீ வைத்து அவர்களை கொலை செய்தனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT