தமிழ்நாடு

ஏற்காடு கோடை விழா: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

DIN


ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் வி.அரவிந்த் கூறியது: ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியை முன்னிட்டு, மே 31 முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சேலம்-ஏற்காடு வழித்தடத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும்,  பயணிகள் ஏற்காட்டில் முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்கும் வகையில், ஏற்காடு-ஏற்காடு (வழி) ஏற்காடு ஏரி, லேடீஸ் சீட், பகோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் ஆகிய இடங்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால், பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிர்த்து, எளிதாக  பயணம் செய்யலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT