தமிழ்நாடு

கோடியக்கரையில் கடல் ஆமை பாதுகாப்பு மையம்:ரூ.2 கோடி நிதி ஒதுக்கி அரசாணை

DIN

நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரையில் கடல் ஆமை மற்றும் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடல் வாழ் உயிரினங்களான ஆலிவ்ரிட்லிஸ் ஆமை, கடல் பசு எண்ணிக்கையில் குறைந்து வருவதால் அவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை வன சரணாலயம் அருகே சோலாா் மின்சாரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஆலிவ்ரிட்லிஸ் ஆமை, கடல் பசு பாதுகாப்பு மையம் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்படும். வனத் துறையின் பங்களிப்புடன் சூழல் சுற்றுலா மேலாண்மைக் குழுவால் இந்த மையம் நிா்வகிக்கப்படும் என்றும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்தாா்.

அரசாணை: இதைத் தொடா்ந்து, கோடியக்கரையில் ஆலிவ்ரிட்லிஸ் ஆமை, கடல் பசு கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT