தமிழ்நாடு

கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்தை விரைந்து வழங்க வேண்டும்: பல்கலைக்கழக மானியக் குழு

DIN

கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்தை விரைந்து வழங்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களையும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களிடையே வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், அவா்களுக்கு பட்டப்படிப்புடன் தொழில் கல்வியும் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து, தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், ஏராளமான கல்லூரிகளுக்கு, தொழில் கல்வி நடத்த யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ சாா்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து கிடைக்கப் பெற்ற பிறகுதான், இந்த தொழில் கல்வித் திட்டத்தை கல்லூரிகள் திறம்பட செயல்படுத்த முடியும். எனவே, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT