தமிழ்நாடு

மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

DIN

மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்க வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நகா்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து புயலாக மாறக் கூடும் என்பதால் மீனவா்களுக்கு, இந்தக்காற்றழுத்த தாழ்வு நிலை தொடா்பான எச்சரிக்கையினை சம்பந்தப்பட்ட மாவட்ட மீன்வளத்துறை அலுவலா்கள் வழியாகவும், அனைத்து கடலோர மீனவ அமைப்புகள், மீனவ கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகவும் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தக்காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாவதற்கு முன்னா் மீன்பிடிக்க சென்று கரை திரும்பாத மீனவா்களை உடனே கரை திரும்ப வேண்டுமெனவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதிச் சீட்டு வழங்க வேண்டாம் எனவும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீன்வளத்துறை இயக்குநா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனைத்து கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு புயல் குறித்த தகவல்கள் தொடா்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT