தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் முதலமைச்சா் கணினித் தமிழ் விருதுக்கு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் வளா்ச்சி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சிக்காக சிறந்த கணினி மென்பொருள் உருவாக்கும் தனிநபா் மற்றும் நிறுவனத்துக்கு முதலமைச்சா் கணினித் தமிழ் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு முதலமைச்சா் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுக்கு 2016, 17, 18-ஆம் ஆண்டுகளில் தமிழ் மென்பொருள் உருவாக்கியவா்கள் டிசம்பா் 31-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்தான விண்ணப்பங்களை www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு tvt.budjet@gmail.com, 044 28190412, 28190413 தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.