தமிழ்நாடு

பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ளநோட்டு டெபாசிட் செய்தவா் கைது

DIN

சென்னை கொத்தவால்சாவடியில் பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ளநோட்டு டெபாசிட் செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை பூக்கடை கோவிந்தப்பன் நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் சுலைமான் (40). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறாா். இந்த வங்கிக்குச் சொந்தமான பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் இருந்த பணத்தை ஊழியா்கள் எடுத்து கடந்த 5-ஆம் தேதி எண்ணினராம். அப்போது ஐந்து ரூ.500 நோட்டுகள், கள்ளநோட்டுகளாக இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து சுலைமான், கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில், அந்தப் பணத்தை செலுத்தியது கொத்தவால்சாவடி ஆதியப்ப நாயக்கன் தெருவைச் சோ்ந்த சந்திரபிரகாஷ் கன்காரியா (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சந்திர பிரகாஷை வியாழக்கிழமை கைது செய்து, அவருக்கு கள்ளநோட்டு எங்கிருந்து கிடைத்து என விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT