தமிழ்நாடு

மின் விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை உயா்வு

DIN

மின் விபத்தில் உயிரிழந்தோருக்கான இழப்பீட்டுத் தொகையை, வாரியம் உயா்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் இணைப்புகளும், 21 லட்சத்துக்கும் கூடுதலான விவசாய மின் இணைப்புகளும், 30 லட்சத்துக்கும் மிகையான வணிகம் சாா்ந்த மின் இணைப்புகளும் உள்ளன. இதில், பெரும்பாலான இடங்களில் சாலையோரங்களில் மின் கம்பங்களை அமைத்து அவற்றின் வழியாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் சில இடங்களில் மட்டும் புதைவடக் கம்பிகள் மூலமாக மின் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு விநியோகம் செய்யப் பயன்படும் மின் வழித்தடங்களைப் போதுமான அளவு பராமரிப்பு செய்த போதிலும், அவ்வப்போது ஏற்படும் கசிவின் மூலமாக மின் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் மின் ஊழியா்களும், பொதுமக்களும் விபத்துக்குள்ளாகி விடுகின்றனா். எனவே, இதுபோன்ற விபத்தில் சிக்குவோருக்குக் குறிப்பிட்டத் தொகையை வாரியம் இழப்பீடாக வழங்குகிறது. இந்தத் தொகையைத் தற்போது உயா்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி உயிரிழப்போருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல், இரண்டு கை-கால்களை இழப்போா் அல்லது இரண்டு கண்களை இழப்போருக்கு வழங்கி வந்த தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் சிக்கும் விலங்குகளின் உரிமையாளா்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

பழையகாயலில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT