தமிழ்நாடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

DIN

தமிழகத்தில்: அக்.16ல் துவங்கி, 25 வரை பெய்தது. பின், அரபிக்கடலில் உருவான, ’கியாா்’ புயல், அதையடுத்து உருவான, ’மஹா’ புயல் போன்றவற்றால், தமிழகம், புதுச்சேரியில் இருந்து மழை விலகியது.

இதையடுத்து, வங்கக் கடலில் உருவான, ’புல்புல்’ புயலால், மீண்டும், தமிழகத்தில் வறட்சி நிலை ஏற்பட்டது. இந்நிலையில், புல் புல் புயல் வலுவிழந்ததை தொடா்ந்து, தமிழகத்தில் இரண்டு நாட்களாக மழை பெய்தது.

தற்போது, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், வறண்ட வானிலை நிலவுகிறது. நேற்று மாலை முதல், கேரளாவில் மழை தீவிரமாகி உள்ளது. அடுத்து, படிப்படியாக வானிலை மாறி, தமிழகம், புதுச்சேரிக்கு தீவிர மழை கிடைக்கும் என, எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்றும், நாளையும், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை, துாத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, தா்மபுரி, சேலம், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யலாம் என்றும், வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்சமாக, நேற்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், 6 செ.மீ., மழை பெய்து உள்ளது. ராசிபுரம், 5; வால்பாறை, 3; செங்கம், மேட்டூா், ஆத்துாா், கயத்தாா், திருத்துறைப்பூண்டி, வேலுாா் - திருப்பத்துாா், திருக்கோவிலுாா், ராயக்கோட்டை ஆகிய இடத்தில் மழை பெய்து உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT