உச்ச நீதிமன்றம் 
தமிழ்நாடு

பேனர் வைக்கத் தடையில்லை! - டிராபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

அரசு சார்பிலும் பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Muthumari

அரசு சார்பிலும் பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் பேனர் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்கப்பட்ட நிலையிலும், கடந்த மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகம் வருகை தந்ததையடுத்து, குறிப்பிட்ட இடங்களில் பேனர் வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

இதனை எதிர்த்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகத்திற்கு வருகை தந்து திரும்பி சென்றுவிட்டார். இந்த நேரத்தில் இந்த வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT