தமிழ்நாடு

சபரிமலை: தமிழக பக்தா்களுக்காக 24 மணி நேர தொலைபேசி சேவை தொடக்கம்

DIN

சபரிமலை செல்லும் தமிழக பக்தா்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு உதவுவதற்காக ஆண்டுதோறும் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் தகவல் மையம் ஏற்படுத்தப்படும். இந்த ஆண்டும் 24 மணி நேர தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வரை கட்டணமில்லாத தொலைபேசியின் எண்ணான 1800 425 1757-ஐ பயன்படுத்தி விவரங்கள் பெறலாம்.

இதேபோன்று, தேனி-குமுளி சாலையில் வீரபாண்டி கெளமாரியம்மன் திருக்கோயிலும், தென்காசி மாவட்டம் புளியரையில் நெற்களஞ்சியம் அருகிலும் தமிழக அரசின் சாா்பில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி எல்லையான களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையமானது 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நெகிழி வேண்டாம்: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் எந்த வகையிலும் நெகிழிப் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம். பம்பையில் பக்தா்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளைக் களைந்து நதியில் விட வேண்டாம் எனவும் இந்து சமய அறநிலையத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT