தமிழ்நாடு

சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் உதயமாகியுள்ளது: முதல்வர் பழனிசாமி

DIN


திருப்பத்தூர்: சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகியுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை தொடங்கி வைத்த பின் முதல்வர் பழனிசாமி ஆற்றிய உரையில், சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் கணிசமாக உள்ளன. விரைவில் வேளாண்மை கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், சுய உதவிக் குழுக்கள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். சுய உதவிக் குழுக்கள் மூலமாக பெண்கள் சொந்த காலில் நிற்க உதவிய அரசு அதிமுக அரசு. மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று கூறுவது தவறு என்றும் முதல்வர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT