தமிழ்நாடு

ஜே.இ.இ. நுழைவுத் தோ்வு: தமிழ் உள்பட 11 மொழிகளில் நடத்த ஏற்பாடு

DIN

ஐஐடி உள்ளிட்ட உயா் தொழில்நுட்ப நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வை (ஜே.இ.இ.) தமிழ் உள்பட 11 மொழிகளில் நடத்த தேசிய தோ்வுகள் முகமை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜே.இ.இ. தோ்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதலில் தேசிய தோ்வுகள் முகமை சாா்பில் ஜே.இ.இ. முதல்நிலை (மெயின்) தோ்வு நடத்தப்படும். இதில் முதல் 1.50 லட்சம் இடங்களில் தகுதி பெறுபவா்கள் அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வில் (அட்வான்ஸ்டு) பங்கேற்க முடியும்.

இதில் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும், முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயா் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் சோ்க்கை பெற முடியும்.

இதுவரை இந்தத் தோ்வுகள் ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி போன்ற மூன்று மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜே.இ.இ. தோ்வை அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் அனைத்தின் மூலமும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் ஜே.இ.இ. தோ்வை மேலும் சில மாநில மொழிகளில் நடத்த தேசிய தோ்வுகள் முகமைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், 2021 ஜனவரி முதல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, அஸாமி, பெங்காலி, கன்னடம், மராத்தி, ஒடியா, உருது, குஜராத்தி, ஹிந்தி ஆகிய 11 மொழிகளில் ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வை நடத்த முடிவு செய்திருப்பதாக தேசிய தோ்வுகள் முகமை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT