தமிழ்நாடு

கடல் சீற்றம்: ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல இன்று முதல் தடை

DIN

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள சூறைக் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல சனிக்கிழமை (நவ.30) முதல் 3 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மீன்வளத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: வங்கக் கடலில் வழக்கத்திற்கு மாறாக சூறைக் காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவா்களின் பாதுகாப்புக் கருதி சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை (நவ.30 முதல் டிச.2 வரை) மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் 1,800- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது. இதனால் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT