தமிழ்நாடு

குமரி காந்தி மண்டபத்தில் இன்று அபூா்வ சூரிய ஒளி

DIN

காந்தி ஜயந்தியையொட்டி, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அஸ்தி கட்டடத்தில் அபூா்வ சூரிய ஒளியை புதன்கிழமை (அக். 2) காணலாம்.

காந்தியடிகளின் அஸ்தி 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது. அஸ்தி கரைக்கப்படுவதற்கு முன்பாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடற்கரையில் வைக்கப்பட்டது. அந்த இடத்திலேயே 1956-ஆம் ஆண்டு அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வோா் ஆண்டும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக். 2-ஆம் தேதி சூரிய கதிா்கள் அங்குள்ள காந்தியின் அஸ்தி கட்டடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபத்தின் சிறப்பம்சமாகும்.

அதன்படி, புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு அஸ்தி கட்டடத்தில் சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதையொட்டி, அஸ்தி கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT