மோடி - ஜின் பிங் சந்திப்பு 
தமிழ்நாடு

மோடி - ஜின் பிங் சந்திப்பு: விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க அனுமதி கோரி மனு 

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின் பிங் இடையிலான சந்திப்பிற்காக விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க அனுமதி கோரி, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. 

DIN

சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின் பிங் இடையிலான சந்திப்பிற்காக விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க அனுமதி கோரி, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. 

சா்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் 3 நாள்கள் தங்குகின்றனா். இவா்கள் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சா்வதேச சுற்றுலா நகரமாக விளங்கக்கூடிய மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அா்ச்சுனன்தபசு உள்ளிட்ட பாரம்பரிய புராதனச் சின்னங்களை இரு நாட்டுத் தலைவா்களும் சுற்றிப்பாா்ப்பதுடன், முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட உள்ளனா்.

இந்நிலையில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின் பிங் இடையிலான சந்திப்பிற்காக விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க அனுமதி கோரி, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதி கோரியுள்ளது. 

இந்த மனுவை உயர் நீதிமன்றம் அக்.3 ஆம் தேதி விசாரிக்க உள்ளது. அதேநேரம் இந்த மனு தொடர்பாக டிராபிக் ராமசாமி உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் வாழ்த்து! செப். 12ல் பதவியேற்பு?

பற்றி எரியும் நேபாளம் - புகைப்படங்கள்

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் நன்றி!

வெள்ளை நிலா... தீப்தி சதி!

SCROLL FOR NEXT