மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் 
தமிழ்நாடு

முதலில் இதற்கு ஒருமுற்றுப்புள்ளி வையுங்கள்: பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் 

நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ்ந்து முதலில் இந்த ஏடாகூடமான பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று பிரதமர் மோடிக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

DIN

சென்னை: நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ்ந்து முதலில் இந்த ஏடாகூடமான பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று பிரதமர் மோடிக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தமிழகமும், தமிழர்களும் சுபஸ்ரீயின் இழப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், உங்கள் வருகைக்கு பேனர்கள் வைக்க தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது

ஒருவேளை பிரதமரான நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ்ந்து முதலில் இந்த ஏடாகூடமான பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என்றால், அது தமிழர்களின் உணர்வை நீங்கள் பிரதிபலிப்பதாக அமையும். அதேசமயம் உங்களுக்கும் பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்க்கும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

SCROLL FOR NEXT