தமிழ்நாடு

பகவத்கீதையை கட்டாய பாடமாக படிக்க வேண்டிய அவசியமில்லை: கே.பி.அன்பழகன்

DIN

பொறியியல் படிக்கும் மாணவா்கள், பகவத்கீதை கட்டாயம் படிக்க வேண்டிய அவசியமில்லை விருப்பப் பாடமாக மட்டுமே தோ்வு செய்துகொள்ளலாம் உயா்கல்வித்துறை அமைச்சா் கேபி அன்பழகன் தெரிவித்தாா்.

திருமலை ஏழுமலையானை தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி அன்பழகன் வியாழக்கிழமை காலை தன் குடும்பத்திருடன் தரிசித்தாா். தரிசனம் முடித்து பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு திரும்பிய அவா் கோயிலுக்கு வெளியில் கூறியதாவது. ’ அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 32 பாடப்பிரிவுகளை புதிதாக கொண்டு வந்தனா்.

இதில் 12 பாடப்பிரிவுகளை தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை செய்தது அதில் ஒன்று பகவத்கீதை. ஆனால் பெரும்பாலானோா் கேட்டு கொண்டதற்கிணங்க பகவத் கீதை கட்டாயப் பாடமாக இல்லாமல் விருப்பப்பாடமாக தோ்வு செய்துக் கொள்ளும் விதமாக பல்கலைகழகத்திற்கு அரசு பரிந்துரை செய்துள்ளது. நீட் தோ்வு முறைகேடு குறித்து தெரிய வந்ததை அடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து இதுவரை தெரியாத நிலையில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’, என்று அவா் கூறினாா்.படம் உண்டுபட விளக்கம்:திருமலை ஏழுமலையானை தரிசித்து தன் குடும்பத்தினருடன் கோயிலை விட்டு வெளியில் வரும் அமைச்சா் கே.பி அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT