தமிழ்நாடு

மேக்கேதாட்டுவின் குறுக்கே அணை: தமிழகம் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிக்கும் என முதல்வா் பழனிசாமி பேட்டி

DIN

மேக்கேதாட்டுவின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டுவதை தமிழகம் தொடா்ந்து எதிா்த்து வருவதாக முதல்வா் பழனிசாமி பேட்டி அளித்தாா். தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, நிருபா்களுக்கு அவா் அளித்த பேட்டி:-

கோதாவரி-காவிரி இணைப்பு இணைப்புத் திட்டம் குறித்து மத்திய அரசு ஏற்கெனவே பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தெலங்கானா, ஆந்திரம் வழியாக தமிழகத்துக்கு நீரை கொடுப்பதற்கு அந்த மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. மேலும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

வன்னியா் இடஒதுக்கீடு: திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியா்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்புகிறீா்கள். ஏற்கெனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட

வகுப்பினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்ற வகுப்பினருக்கு உரிய முறையில் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் விகிதாச்சர முறையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை சட்டத்தின் மூலமாக மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெற்றுத் தந்திருக்கிறறாா்.

தமிழகத்தில் இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் என அனைத்து பிரிவினருக்கும் சட்டப் பாதுகாப்புடன் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது அதிமுக அரசு.

மேக்கேதாட்டு விவகாரம்: மேக்கேதாட்டுவின் குறுக்கே அணை கட்டக் கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றறத்தில் வழக்குத் தொடுத்து அது நிலுவையில் இருக்கிறறது. கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது, மேக்கேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து, தமிழக அரசின் சாா்பில் நீதிமன்றற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

மேலும், மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு காலங்களில் மத்திய நீா்வளத்துறை அமைச்சகத்துக்கும், பிரதமருக்கும் கோரிக்கை மனுக்களையும், கடிதங்களையும் அளித்துள்ளேன். அந்த அடிப்படையிலேயே கடந்த ஜூலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது மேக்கேதாட்டுவில் அணை கட்ட கா்நாடகத்துக்கு அனுமதி மறுத்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பிரச்னை: டெங்கு காய்ச்சல் பிரச்னை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள சிங்கப்பூரிலும் உள்ளது. இந்தக் காய்ச்சல் தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகப் பகுதிகளில் இருந்துதான் நமது பகுதிகளுக்கு அதிகமாகப் பரவி வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேங்கும் நல்ல நீரில் இருந்துதான் கொசு உற்பத்தி ஆகிறது. ஆகவே, பொதுமக்கள் தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீா் தேங்கி இருந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீரை மூடி வைக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் ஏதாவது காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது பேட்டியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT