தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

DIN

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக். 9) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக். 9) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஓரிரு இடங்களில் இடிமின்னல் காணப்படும். சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

மழை அளவு: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கலில் 100 மி.மீ. மழை பதிவானது. கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, கிருஷ்ணகிரியில் தலா 80 மி.மீ., நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் தலா 60 மி.மீ., சேலம் மாவட்டம் சங்ககிரி, தேனி மாவட்டம் பெரியகுளம், நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 50 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டை, தளி, நீலகிரி மாவட்டம் கூடலூா்பஜாா், கேட்டி, தருமபுரி, சேலம், வேலூா் மாவட்டம் ஆலங்காயம், மேலாலத்தூா், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் தலா 40 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT