சிசிடிவி கேமராவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட திருடன்! 
தமிழ்நாடு

திருடர்கள் பலவிதம்: சிசிடிவி கேமராவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட திருடன்!

திருடர்கள் பலவிதம் அதில் நாம் இப்போது பார்க்கவிருப்பது, திருட வந்த வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவி கேமராவைக் கண்டவுடன் தலையில் அடித்துக் கொண்டு கொள்ளை முயற்சியைக் கைவிட்ட திருடனைப் பற்றி.

சி.பி.சரவணன்

திருடர்கள் பலவிதம் அதில் நாம் இப்போது பார்க்கவிருப்பது, திருட வந்த வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவி கேமராவைக் கண்டவுடன் தலையில் அடித்துக் கொண்டு கொள்ளை முயற்சியைக் கைவிட்ட திருடனைப் பற்றி.

சென்னை குரோம்பேட்டை அருகே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவன் திடீரென சிசிடிவி கேமராவைக் கண்டவுடன் சோகத்துடன் தலையில் அடித்துக் கொண்டு கொள்ளை முயற்சியை கைவிட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சிட்லபாக்கம் ஜெயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஸ்ரீதர் என்பவரது வீட்டில் வாயில் கதவை, நீண்ட ராடைக் கொண்டு திருடன் உடைக்கிறார். பெரும் முயற்சிக்கு பிறகு வீட்டுக் கதவின் வெளியே உள்ள இரும்பு கேட்டின் பூட்டை உடைக்கும் கொள்ளையன் உள்ளே செல்கிறான்.

பிறகு கதவின் பூட்டை உடைக்கும் முன்பாக அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அவன் பார்த்து விடுகிறான். இதனை தொடர்ந்து தனது தலையில் அடித்துக் கொள்கிறான். பின்னர் பூட்டை உடைத்து திறந்த இரும்பு கேட்டை மூடிவிட்டு கொள்ளையன் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறான்.

வெளியூர் சென்று வந்த வீட்டு உரிமையாளர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது இந்த காட்சிகள் சிக்கியுள்ளன.

புகாரின் பேரில் சிட்லபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, திருட வந்த வீட்டில் ஊஞ்சலாடிச் சென்ற கொள்ளையன், வேலூர் அருகே பாஸ்தா செய்து சாப்பிட்டுச் சென்ற கொள்ளையர்கள் வரிசையில் இவரும் இணைந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருளை பரிசளிக்கும்... அஸ்லி மோனலிசா

விழிகளின் தேடல்... ரிச்சா ஜோஷி

தங்கத் தேரழகு... துஷாரா விஜயன்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

மஞ்சலோக மேனி... கெளரி கிஷன்!

SCROLL FOR NEXT