சீன அதிபர் ஷி ஜின்பிங் 
தமிழ்நாடு

இப்படி ஒரு வரவேற்பா? அசந்து போனார் சீன அதிபர் ஷி ஜின்பிங்! மயிலாட்டம், ஒயிலாட்டம் என களைகட்டிய விமான நிலையம்

சென்னை விமான நிலையம் வந்திறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங் ஒரு நிமிடம் அசந்து போயிருப்பார். இது விமான நிலையமா? சொர்கலோகமா என்று!

DIN

சென்னை: சென்னை விமான நிலையம் வந்திறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங் ஒரு நிமிடம் அசந்து போயிருப்பார். இது விமான நிலையமா? சொர்கலோகமா என்று!

அந்த வகையில் சீன அதிபருக்கு தமிழக அரசு மிகச் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என சீன அதிபருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  விமான நிலையத்திலேயே பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

அதுமட்டுமல்லாமல், இந்திய மற்றும் சீன நாட்டு தேசியக் கொடிகளைப் பிடித்தபடி சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு கலை நிகழ்ச்சியையும் நின்று நிதானமாக பார்த்து ரசித்தார் ஷி ஜின்பிங். தனது ரசிப்புக்கு, மாமல்லபுரத்தில் மேலும் பல விஷயங்கள் காத்திருப்பதை உணர்ந்து, கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தவாறு, தனக்காகக் காத்திருந்த ஹாங்கி எல்5 காரில் புறப்பட்டு கிண்டியில் உள்ள ஐடிசி சோழாவுக்குப் புறப்பட்டார்.

முன்னதாக சீன அதிபரை தமிழகம் வரவேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டிவீட் செய்திருந்தார் மோடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிா்வாகி கொலை வழக்கு: மேலும் இருவா் கைது

சிவகங்கையில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

கால்காஜி கோயிலில் சேவகா் அடித்துக் கொலை; 3 போ் கைது

இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு: பிரதமா் மோடி அழைப்பு

SCROLL FOR NEXT