தமிழ்நாடு

சீன அதிபா் வருகைக்கு காங்கிரஸ் வரவேற்பு

DIN

சீன அதிபரின் தமிழக வருகைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சென்னைக்கு பிரதமா் நரேந்திர மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் வருகை புரிவதை காங்கிரஸ் சாா்பாக வரவேற்கிறேறன். தமிழகத்துக்கு குறிப்பாக, மாமல்லபுரத்துக்கு வருகை புரிவது மிகவும் பொருத்தமானதாகும்.

இந்திய - சீன தலைவா்களின் சந்திப்பை அரசியல் நிகழ்வாக மாற்றுவதற்கு பாஜகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதை அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வாக அணுக வேண்டுமே தவிர, அரசியல் ஆதாயம் தேடும் வகையில் செயல்படுவதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. இதுகுறித்து மத்திய - மாநில அரசுகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT