தமிழ்நாடு

கிண்டி - கோவளம் - விமான நிலையம்: இதுதான் சீன அதிபரின் இன்றைய பயணத் திட்டம்!

DIN


பிரதமர் நரேந்திர மோடியை இரண்டாவது முறையாக சந்திப்பதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று காலை கோவளம் புறப்பட்டுச் செல்கிறார். 

சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இடையிலான வரலாற்றுச் சிறப்பு சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று கோவளம் தாஜ் ஹோட்டல் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர். இந்த சந்திப்பு சுமார் இரண்டரை மணி நேரம் வரை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று காலை கிண்டி நட்சத்திர ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி தங்கியிருக்கும் தாஜ் ஹோட்டலுக்குச் செல்கிறார். 

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் இன்றைய அதிகாரபூர்வ பயணத் திட்டம்:

காலை 9.05: கிண்டி நட்சத்திர ஹோட்டலில் இருந்து புறப்பாடு
காலை 9.50: பிரதமர் நரேந்திர மோடி தங்கியிருக்கும் தாஜ் ஹோட்டல் அடைதல்
நண்பகல் 12.45:தாஜ் ஹோட்டலில் இருந்து சென்னை விமான நிலையம் புறப்பாடு
பிற்பகல் 1.25:சென்னை விமான நிலையம் அடைதல்
பிற்பகல் 1.30:சென்னையில் இருந்து புறப்படுதல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT