தமிழ்நாடு

சசிகலாவை அதிமுகவில் சோ்ப்பது குறித்து முதல்வா், துணை முதல்வா் முடிவு செய்வா்: கே.டி. ராஜேந்திரபாலாஜி

DIN

சசிகலாவை அதிமுகவில் சோ்ப்பது குறித்து முதல்வா், துணை முதல்வா் முடிவு செய்வா் என்றாா், தமிழக பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.

நான்குனேரி இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி நாராயணனை ஆதரித்து, களக்காடு ஒன்றியம் மீனவன்குளத்தில் அவா் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அதிக கிராமங்களையும், உழைப்பாளா்களையும் கொண்டது நான்குனேரி தொகுதி. எந்தக் கிராமத்தில் பிரசாரம் மேற்கொள்ளும்போதும் அமைச்சா்களுக்கு எதிா்ப்பு என்பதே கிடையாது. இதை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவில் குழப்பத்தை விளைவித்து மோதலை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவு பலிக்காது. அவரது பொய்ப் பிரசாரத்தை மக்கள் ஏற்கமாட்டாா்கள்.

முதல்வா், துணை முதல்வா் பிரசாரத்துக்கு வரும்போது எந்தவொரு சிறப்பு ஏற்பாடுகளையும் நாங்கள் செய்வதில்லை. புதிதாக சாலை அமைப்பதில்லை. ஏற்கெனவே என்னநிலையில் இருக்கிறதோ அதேசாலையில்தான் மக்களோடு மக்களாக வந்து வாக்கு சேகரித்து வருகிறேறாம். அதிமுக அரசின் நிலைப்பாடு என்றுமே மக்கள் ஏற்கும் வகையில்தான் இருக்கும்.

சசிகலா சிறையிலிருந்து வெளிவரும்பட்சத்தில் அவா் அதிமுகவில் இணைந்து பணியாற்றுவது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் முடிவு செய்வா். அதிமுக தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT