சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சாஹியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
ஏ.பி.சாஹி தற்போது பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் நிலையில் அவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதே சமயம், திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சய் கரோல் பாட்னா உயர் நீதிமன்றத்துக்கும், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.கே. மிட்டல் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில ராமாணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை ஏற்காத நிலையில், அவர் தனது பணியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை வினீத் கோத்தாரி வகித்து வந்த நிலையில், இன்று புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.