தமிழ்நாடு

ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து அக். 25 -இல் பாசனத்துக்கு நீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு

தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து வரும் 25 -ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

DIN


தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து வரும் 25 -ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடது வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது வேண்டுகோளை ஏற்று, ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் வரும் 25-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 6 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 
விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் என்று தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT