தமிழ்நாடு

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

DIN


நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 4 மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை தேனி நீதிமன்றம் தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டது. 
நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில்  சென்னை மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ், வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவர் முகமது இர்பான், அவரது தந்தை முகமது சபி, தருமபுரியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா, அவரது தாயார் மைனாவதி  ஆகிய 8 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். 
இவர்கள் நீதிமன்றக் காவலில் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   8 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.   
இந்த மனுக்கள், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT