தமிழ்நாடு

தீபாவளியை ஒட்டி மெட்ரோ ரயிலில் "சூப்பர் டிஸ்கவுண்ட்"!

DIN

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில் நிர்வாகம் இரண்டு நாட்களுக்கு கட்டண சலுகையை அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. முன்னதாக சனி மற்றும்  ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் விடுமுறையாக இருந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாள் (28- ஆம் தேதி) திங்கட்கிழமையும் அரசு சிறப்பு விடுமுறை விடுத்து உத்தரவிட்டது.

தீபாவளிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகளும் ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதாகரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில் நிர்வாகம் இரண்டு நாட்களுக்கு கட்டண சலுகையை அறிவித்துள்ளது.

அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT