சுஜித் மீட்பு 
தமிழ்நாடு

உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ஆன செலவு எவ்வளவு? திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ஆன செலவு எவ்வளவு என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

DIN

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ஆன செலவு எவ்வளவு என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், பிரிட்டோ ஆரோக்கியராஜ் - கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அந்தக் குழந்தையை மீட்கும் பணி கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வந்த நிலையில், 80 மணிநேர போராட்டடத்திற்குப் பிறகு செவ்வாய் அதிகாலை குழந்தை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகமே சோகத்தில் மூழ்கியது.  இதற்கு பல்வேறு தரப்பினரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.  

அதேசமயம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ஆன செலவு என ஒரு தொகை குறிப்பிட்டு  சமூக வலைத்தளங்களால்   செய்தி பரவியது.  

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ஆன செலவு எவ்வளவு என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, 'ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ரூ.5 லட்சம் தான் செலவானது. சுஜித் மீட்புப் பணிக்காக ரூ.10 கோடி செலவானதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை; மீட்புப்பணிக்காக செலவிட்ட தொகை குறித்து பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாற்றங்கால் பண்ணைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT