சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
காவிரியின் மீது கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை அது கட்டிமுடிக்கப்பட்டு 86 ஆண்டுகள் ஆன நிலையில், 43வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருக்கிறது.
மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியிருப்பது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 76,000 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை தொடர்ந்து முழுக் கொள்ளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலேயே இரண்டு முறை நிரம்பியிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.