தமிழ்நாடு

தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை: கால அவகாசத்தை நீட்டித்து யுஜிசி அனுமதி

DIN


நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் திறந்தநிலை, தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கையை நிறைவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதியளித்துள்ளது.
தொலைநிலைப் படிப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னர், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான  (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) புதிய வழிகாட்டுதலை 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது. 
மேலும் தொலைநிலைக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்,  மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சை சாஸ்தரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர் க
ல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய 10 உயர் கல்வி நிறுவனங்கள் வழங்கும் தொலைநிலைப் படிப்புகள் மட்டுமே தகுதி பெறும் நிலை உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள தகுதிபெற்ற கல்வி நிறுவனங்கள் திறந்தநிலை, தொலைநிலைப் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என யுஜிசி முன்னர் அறிவித்திருந்தது. 
இப்போது இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பல்வேறு கல்வி நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. 
அதன்படி, கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளில் வரும் 31-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம். அதன் பின்னர் சேர்க்கை விவரங்களை யுஜிசி வலை தளத்தில் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT