கரூரில் தெருநாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(40). இவரது வீட்டின் அருகே தெருநாய் ஒன்று சுற்றியுள்ளது. அந்த நாய் கடந்த 2 நாள்களுக்கு முன் பாலகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்று உணவை உண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் நாயை தனது நண்பர் கரூர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் கொக்குச்சுடும் துப்பாக்கியைக் கொண்டு வந்து நாயை வியாழக்கிழமை சுட சம்பவ இடத்திலேயே நாய் இறந்துள்ளது.
இதைக்கண்ட அப்பகுதியினர் வெங்கமேடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் பாலசுப்ரமணியன் மற்றும் ரமேசை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.