தமிழ்நாடு

ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து ரூ. 86 லட்சம் மோசடி: துப்புரவு ஊழியர் பணியிடை நீக்கம்

DIN

சேலத்தில் மாநகராட்சி பணியாளர்களுக்கான ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து ரூ. 86 லட்சம் பணமோசடி செய்த துப்புரவு பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், மாநகராட்சி நிதியில் பல லட்சம் கணக்கில் வராமல் இருந்தது. இதுகுறித்து தணிக்கைத் துறை அதிகாரிகள் கடந்த ஒரு மாதம் வசூல் செய்யப்பட்ட வரி வசூல் விவரம் குறித்து ஆய்வு செய்தனர். இதில் மாதந்தோறும் மாநகராட்சி பணியாளர்களுக்கான ஊதிய பட்டியல் மற்றும் காசோலைகளை வங்கிக்குக் கொண்டு செல்லும் துப்புரவுப் பணியாளர் வெங்கடேஷ் குமார், அந்த ஆவணங்களில் திருத்தம் செய்து ரூ. 86 லட்சம் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ், உதவி ஆணையர் ரமேஷ் பாபு ஆகியோர் மாநகர காவல் ஆணையர் த. செந்தில்குமாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை செய்த மத்திய குற்றப் பிரிவு போலீஸார்,

ங்கடேஷ்குமார் மற்றும் அவரது சகோதரர் மோகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், மாநகராட்சி ஊழியர்கள் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே மோசடி வழக்கில் கைதான வெங்கடேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT