திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

அமித் ஷா கருத்துக்கு எதிராக செப்டம்பர் 20-இல் திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு 

ஹிந்தி மொழி பற்றிய அமித் ஷா க கருத்துக்கு எதிராக செப்டம்பர் 20-இல் திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DIN

சென்னை: ஹிந்தி மொழி பற்றிய அமித் ஷா கருத்துக்கு எதிராக செப்டம்பர் 20-இல் திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலாலின் அழைப்பின் பேரில், கிண்டி ஆளுநர் மாளிகையில் புதன் மாலை அவரை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று குறிப்பிடப்பட்டது.

சந்திப்புக்குப் பிறகு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பேரிலேயே அவரைச் சென்று சந்தித்தேன். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக வரும் 20-ஆம் தேதி திமுக அறிவித்துள்ள போராட்டம் குறித்து ஆளுநர் விசாரித்தார். இந்தப்போராட்டம் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் குறித்து அவர் கவலை தெரிவித்தார். அதேநேரம் மத்திய அரசு ஹிந்தியைத் திணிக்காது என்று அவர் உறுதியளித்தார்.

அதேசமயம் பொதுமொழி பற்றிய எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா ஊடகங்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஹிந்தி மொழி பற்றிய அமித் ஷா கருத்துக்கு எதிராக செப்டம்பர் 20-இல் திமுக நடத்தவிருந்த போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

ஆனால் ஹிந்தித் திணிப்பை திமுக ஒருபோதும் ஏற்காது. எப்போதும் எதிர்த்து நிற்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பால் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT