தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்கு புதிய விதிமுறைகள்: பதிலளிக்க உத்தரவு

DIN


பருவத் தேர்வு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய தேர்வு விதிமுறைகளை அமல்படுத்த தடை விதிக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த பிரியதர்ஷினி, மெளலி உள்பட 10 மாணவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தேர்வில் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. 
இந்த புதிய விதிமுறையின்படி மாணவர் ஒருவர் ஒரு பருவத் தேர்வில் தோல்வியடைந்தால் மறுத்தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற அவருக்கு மூன்று பருவத்தேர்வுகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். அவர் அந்த வாய்ப்புகளில் தேர்ச்சிப் பெறாவிட்டால், அடுத்த பருவத்தில் படிப்பைத் தொடர முடியாது என புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள இந்த புதிய விதிமுறைகளால் தங்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் எனவே இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். 
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் கொண்ட  அமர்வில்  வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கந்தவடிவேல், இந்த புதிய நடைமுறையால் 2 மற்றும் 3 ஆண்டு படிக்கும் மாணவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு மட்டுமாவது பழைய நடைமுறைப்படி தேர்வைச் சந்திக்க அனுமதி வழங்க பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.  
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT