தமிழ்நாடு

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்.30-இல் நிறைவு: பள்ளிக் கல்வித்துறை

DIN


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  வரும் 30-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நிறுத்திக்கொள்ள வேண்டுமென  பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும்  ஏப்ரலில் மாணவர் சேர்க்கை தொடங்கும்.  தனியார் பள்ளிகளை பொருத்தவரை, மே மாதத்துக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து விடுவர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து சேர்க்கப்படுகின்றனர். இது போன்ற பல காரணங்களால், ஆகஸ்ட் வரை மாணவர் சேர்க்கை நீடிக்கும். ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், மேலும்,  ஒரு மாதம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு செப்டம்பர் வரை மாணவர்களை சேர்க்க  அரசு அனுமதியளித்துள்ளது.  இந்த காலக்கெடு வரும் 30-ஆம் தேதியுடன் முடிகிறது.  இதைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறைக்கு பிறகு, இரண்டாம் பருவம் மற்றும் அரையாண்டு தேர்வு பாடங்கள்  மாணவர்களுக்கு நடத்தப்படும். எனவே செப்.30-ஆம்  தேதியுடன் புதிய மாணவர்களின் சேர்க்கையை நிறுத்திக் கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT