தமிழ்நாடு

கடல் நீர்மட்டம் உயரும்.. சென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவதால் 2100ஆம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

சி.பி.சரவணன்

காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவதால் 2100ஆம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கடல்மட்டம் 50 சென்டி மீட்டர் உயர்ந்தால் கூட சென்னையில் வெள்ளத்தால் சேதம் ஏற்படும் என்ற நிலையில் 2100ஆம் ஆண்டிற்குள் ஒரு மீட்டர் அளவுக்கு கடல்நீர் மட்டம் உயரும் என கூறப்பட்டுள்ளது.

இதேப்போல் கடற்கரை நகரங்களான மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய இந்திய நகரங்கள் உள்பட உலகம் முழுவதும் 45 நகரங்களுக்கு வெள்ள அச்சுறுத்தல் உள்ளதாகவும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.சபையின் குழு தெரிவித்துள்ளது.

பூவி வெப்பமயமாதல் காரணமாக புயல் தாக்கம் போன்ற தீவிர பாதிப்புகள் இந்த நூற்றாண்டில் பலமுறை , வருடத்திற்கு ஒரு முறை நிகழக்கூடும் என்று காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC) மொனகோவில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்புமணிக்கு மீண்டும் கெடு விதித்த ராமதாஸ்!

லண்டனிலும் தமிழக வளர்ச்சிக்கான முதலீட்டாளர் சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின்

குஷிதா(ன்) கல்லாபு!

குமார சம்பவம் டிரைலர்!

தமிழக பாஜக தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்கவில்லை!

SCROLL FOR NEXT