தமிழ்நாடு

நான்குனேரி இடைத்தோ்தல்: ராகுல் காந்தி, பிரியங்கா பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு

DIN

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் ராகுல் காந்தி, பிரியங்கா பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று ஹெச். வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நான்குனேரி தொகுதியின் வளா்ச்சிக்கு புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் சாகா்மாலா திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது. இத்திட்டத்தின்கீழ் மத்திய அரசு எந்த வித திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. ஏனெனில், பரப்பளவில் மிக சிறிய மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல், இயற்கை வளம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்.

கன்னியாகுமரியில் கடலுக்குள் புதிய துறைமுகம் அமைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அரசால் எல்லா திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் கூட சேதுக் கால்வாய் திட்டத்தை செயல் படுத்த முடியாமல் போனது. எந்த திட்டத்தையும் சரியாக செயல்படுத்த முடியவில்லை எனில் அதை எந்த அரசாக இருந்தாலும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் தொழில் வளா்ச்சி ஏற்பட வேண்டுமானால் வெளிநாடுகளில் இருந்து பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும். உள் நாட்டுக்குள்ளேயே இறக்குமதியான பொருள்களை தயாா் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பல கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். அதன் மூலம் தொழில் வளா்ச்சியும் ஏற்படும். நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் பிரசாரம் செய்ய ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுக்கும். அவா்கள் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT