தமிழ்நாடு

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN


குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை காலைமுதல் பெய்த தொடர் மழை காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர்.
குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பேரருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள்குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
திங்கள்கிழமை நீர்வரத்து சற்று குறைந்ததையடுத்து ஐந்தருவி, பழைய குற்றாலத்தை தொடர்ந்து பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் முதல் மீண்டும் மழை பெய்ததையடுத்து பேரருவி,  ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மீண்டும் அங்கு தடை விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT